அம்பிட்டிய சுமண ரத்ன தேரின் விளக்கமறியல் நீடிப்பு


அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இன்று செவ்வாய்க்கிழமை (08) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்றையதினம் மீண்டும் தேரர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்துக்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.