யால தேசிய பூங்காவில் சட்டவிரோத வேட்டை: சந்தேகநபரைத் தேடி விசாரணை

 


யால தேசிய பூங்காவின் ஐந்தாவது வலயத்தில் சட்டவிரோத வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி வெஹெரகல பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தை சஃபாரி ஜீப் சாரதியொருவர் காணொளியாகப் பதிவு செய்து, அன்றைய தினமே பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது சந்தேகநபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது வசிப்பிடத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரியவந்துள்ளதால், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

குறித்த நபர் இதற்கு முன்னரும் வனஜீவராசிகள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சம்பவம் தொடர்பில் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.