அக்கரைப்பற்று பிரதான வீதியில் லங்கா ஸ்டோருக்கு அருகில் இயங்கிவரும் ‘LU LU’ நிறுவனத்தின் மேல்தளத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தினால் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவத்தின்போது விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்திய தீயணைப்புப் பிரிவினருக்கு அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.









.jpg)

.webp)
.jpg)
.jpeg)