தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆணையும் மக்கள் ஆதரவும் குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை, மாறாக தேர்தல் காலத்தை விட தற்போது மக்கள் ஆதரவும் நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக்செயலாளர் ரில்வின் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், "ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி" எனும் தொனிப்பொருளில் நாடு முழுவதும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் ஞாயிற்றுக்கிமை (06) களுத்துறை மாவட்ட பேருவளை பிரதேசத்தில் ஆரம்பமானது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆணை குறைந்துவிட்டதாகவும், ஆதரவு குறைந்துவிட்டதாகவும் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு கருத்துக்களையும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் திரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களை நேரில் வந்து இன்று பார்வையிடுங்கள். இதுவே மக்களின் உண்மையான பலம், மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை ஒரு சிறு துளியளவும் குறையவில்லை.
இதுவரை இலங்கையில் ஆட்சி அமைத்த எந்தவொரு கட்சியும் வடக்கையும் மலையகத்தையும் முழுமையாக அரவணைத்துத் தாமே நேரடியாக ஆட்சி அமைத்ததில்லை. இதற்கு முன்னர் ஆட்சியமைத்தவர்கள் உடைந்த கட்சிகளுக்கும், வடக்கிலும் மலையகத்திலும் உள்ள வேறு கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கியே ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால், தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தலில் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21-ஐக் கைப்பற்றி, வரலாற்றில் முதல் முறையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சகல வாக்குகளுடன் இந்த மக்கள் அரசினை உருவாக்கியுள்ளது. தேர்தல் காலத்தை விடவும் தற்போது மக்களது ஆதரவும் நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அநுராத குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கான, அழகான நாட்டை உருவாக்குவதை நோக்கி மிகவேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்றார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4





.jpg)





.jpg)

