திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது விடுதி பொறுப்பாளர் எனக் கூறப்படும் 54 வயதுடைய ஆண் ஒருவரும், 48, 43 மற்றும் 38 வயதுடைய மூன்று பெண்களும் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் திருகோணமலை தலைமையக பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





.jpg)


.jpg)
.jpg)

.jpg)

