
கொழும்பு காலிமுகத்திடலில் 13 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி, கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேடப்பட்டு வரும் சந்தேகநபரின் வரைபடமொன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன், அவரை அடையாளம் காணவும் இருப்பிடத்தைக் கண்டறியவும் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071-8591560 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது கோட்டை பொலிஸ் நிலையத்தை 011-2432635 என்ற இலக்கத்திலோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




.jpg)


.jpg)
.jpg)

.jpg)

