மொனறாகலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
எங்களை மற்றொரு ராஜபக்ஷவின் அவதாரம் எனக்கூறி சிலர் கூச்சலிடுகின்றனர். அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டு, தேசியவாத அரசியலை அழித்த பசில் ராஜபக்ஷவே சதித்திட்டம் தீட்டி, மஹிந்தவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஜனாதிபதியாகும் கனவில் செயற்பட்டார். அப்போது நாங்கள் மனவருத்தத்துடன் ஒதுங்கிக்கொண்டோம்.
இன்று இந்நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்டத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. 'எனக்குத் தேவையானதை நான் செய்வேன், மகாநாயக்க தேரர்கள் கூறினாலும் கேட்கமாட்டேன்' என எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரை கூறியதில்லை, தற்போதைய ஜனாதிபதி மட்டுமே அவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறான சர்வாதிகார ஜனாதிபதியை மக்களாகிய நீங்கள் கொண்டுவரவில்லை, சுயநலமிக்க அரசியல்வாதிகளே கொண்டுவந்தனர்.
வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானாலும் மனசாட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யாத அரசியலால் எந்தப் பயனுமில்லை. நாங்கள் முன்னெடுப்பது முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைக்கும் அரசியலாகும். அதற்காக ஏனைய கட்சிகளுக்கு முட்டுகொடுப்பதோ அல்லது பரம்பரை, குடும்ப அரசியலுக்கு ஆதரவளிப்பதோ எங்களின் எதிர்பார்ப்பல்ல. தந்தை வழியில் தலைமைத்துவம் வரும் என்ற காலம் மாறிவிட்டது.
இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை பொருளாதாரம் எனில், அதற்கான தீர்வும் பொருளாதாரமாகவே அமைய வேண்டும். பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பயன்படுத்திய 'தொழில்முனைவோர் அரசு' என்ற கோட்பாட்டையே நாங்களும் முன்மொழிகின்றோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசாமல், வரிகளை விதிப்பது பற்றியும் கருவூலத்தை நிரப்புவது பற்றியும் மட்டுமே பேசுகின்றனர். 2028 இல் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடன் சுமை குறித்து எந்த உரையாடலும் இல்லை.
செவனகலை சர்க்கரை ஆலையை மூடி, அதனை விற்பனை செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. எப்படியிருப்பினும், 2029 ஆம் ஆண்டாகும் போது நாங்கள் தொழில்முனைவோர் அரசை உருவாக்கி, செவனகலை உள்ளிட்ட கம்பெனிகளின் இலாபத்தை மும்மடங்காக உயர்த்தும் வேலைத்திட்டத்தை முன்வைப்போம். இந்நாட்டைக் கட்டியெழுப்பக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நம்பிக்கையளிக்கும் இச்செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.




.jpg)
.jpg)







