அதன்படி, இதுவரை வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,490 விவசாயிகளுக்குச் சொந்தமான 1,115 ஏக்கர் நிலப் பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக இதுவரை 57 மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதுடன், நடப்பாண்டில் மேலதிக நட்டஈடாக சுமார் 1,800 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வறட்சி நிலைமைகளால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக மொத்தம் 6,062 விவசாயிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இவர்களுடைய சுமார் 7,957 ஏக்கர் அளவிலான பயிர்ச் செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாரியம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, பயிர்ச் சேதங்களை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்து, எஞ்சியுள்ள விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக விவசாய காப்பீட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.





.jpg)


.jpg)


.jpg)

.jpg)