சட்டவிரோதமாகத் தீர்வையற்ற முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் களுத்துறை பிராந்திய நச்சு போதைப்பொருள் சோதனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை, தர்கா நகர் மற்றும் சீனக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து, இவ்வாறான சட்டவிரோதத் தீர்வையற்ற சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் களுத்துறை பிராந்திய நச்சு போதைப்பொருள் சோதனைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (01) பிற்பகல் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, பேருவளை - பிட்டவல பகுதியில் உள்ள கடை ஒன்றைச் சோதனையிட்ட போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 சிகரெட்டுகளைப் பொலிஸாரால் பொறுப்பேற்க முடிந்துள்ளது.
குறித்த சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் எனக் கூறப்படுவதுடன், அவற்றில் அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள சுகாதார எச்சரிக்கைகளோ அல்லது படங்களோ அச்சிடப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த கடையில் பணியாற்றிய ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

.jpg)