
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03) சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மது ஒழிப்பு இயக்கம் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மதுபானப் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் மதுபானத்தைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதேவேளை, உலகளவில் மதுபானப் பாவனை காரணமாக ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தீங்கு விளைவிக்கும் மதுபானப் பாவனையுடன் தொடர்புடைய உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகளின் தீவிரத்தன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.




.jpg)







