
அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்ட புதிய பாதுகாப்பு விதியை மீறிய சுமார் 3,000 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பயணிகள் பெரும்பாலோர் இச்சட்டத்திற்கு அமைவாக நடந்துகொண்ட போதிலும், சிலர் தொடர்ச்சியாக விதிகளை மீறிச் செயற்பட்டு வருவதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை வலியுறுத்தும் பாதுகாப்பு விதிமுறை கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








.jpg)


.jpg)
