இகினிமிட்டிய குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 47 வயது நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு



கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இகினிமிட்டிய குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) குறித்து கொடவெஹெர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் பலுகொல்ல, கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபராவார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கொடவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.