இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐகுல் ஷெரகசினா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனம் அடைந்துள்ளமையினால், வழக்குக்கு முன்னைய மாநாட்டிற்காக இவ்வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் முறையான அனுமதிப்பத்திரமின்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





.jpg)







