
பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்தோல பகுதியில் உள்ள வாவியில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (01) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கிடைத்தத் தகவலின் பேரில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெல்லன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவராவார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)







