
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ள மொத்த வருமானம் 4 ரில்லியன் ரூபாவை அண்மித்துள்ள நிலையில், பண்டம் மற்றும் சேவை வரி ஊடாக அறவிட்ட வரிகள் ஊடாக மாத்திரம் 2.36 ரில்லியன் ரூபா வரி வருமானம் திரட்டப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அரச நிதி மீளாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டில் முதல் 08 மாத காலப்பகுதியில் அரசின் மொத்த வருமானம் 4002,3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் எட்டுமாத காலப்பகுதியில் 3301.5 பில்லியன் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இந்த ஆண்டு அந்த வருமானம் 700.8 பில்லியன் ரூபாவால் அதாவது 21.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 2026 ஆம் ஆண்டுக்கு அரச வருமானமாக 5300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள நிலையில்,முதல் எட்டுமாத காலப்பகுதியில் அந்த இலக்கு 75.5 சதவீதமாக அடையப்பட்டுள்ளது.
பண்டம் மற்றும் சேவை ஊடாக கடந்த ஆண்டு 1939 பில்லியன் ரூபா வரி வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு அந்த வருமானம் 2367 பில்;லியன் ரூபா வரை உயர்வடைந்துள்ளது.
அதற்கமைய இந்த ஆண்டின் முதல் எட்டுமாத காலப்பகுதியில் வரிவருமான வளர்ச்சி 22 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
இந்த தொகுதியில் வெற்வரி (சேர் பெறுமதி வரி) ஊடாக மாத்திரம் எட்டுமாத காலத்தில் 1322.7 பில்லியன் ரூபா வரி வருமானம் திரட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த வருமானம் 1084.2 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அந்த வருமானம் 22 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
தேசிய வருமான நடவடிக்கைள் ஊடாக அறவிடப்பட்ட வெற் வரி வருமானம் 28 சதவீதமாகவும், இறக்குமதி ஊடாக அறவிடப்பட்ட வெற் வரி வருமானம் 16 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.இறக்குமதி ஊடாக மாத்திரம் இக்காலப்பகுதியில் 599 பில்லியன் ரூபா வெற் வரி வருமானம் திரட்டப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம் மீதான வரி கிடைப்பனவு மொத்த அரச வருமான வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிப்பு செய்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இக்காலப்பகுதியில் 1728 பில்லியன் ரூபா, இலங்கை சுங்கத் திணைக்களம் 1727 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளன.
அரசின் வட்டி வீதம் செலுத்தல் 1687.6 பில்லியன் ரூபாவில் இருந்து 1609.2 பில்லியன் ரூபா வரை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








.jpg)


.jpg)
