கைது செய்யப்பட்டவர்களில் 8 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவது கவலையளிப்பதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உலக சிறுவர் தினத்தை நாம் கொண்டாடிய வேளையில், மிகவும் கவலையுடன் ஆயினும் கூற வேண்டியுள்ளது; 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 8 முதல் 21 வயதிற்குட்பட்ட 9,105 சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பல்வேறு போதைப்பொருள் காரணங்களுக்காக நாங்கள் கைது செய்ய வேண்டியேற்பட்டது. அதேபோல, இந்தச் சிறுவர்களில் 8,932 ஆண் சிறுவர்களைப் பொலிஸ் பொறுப்பில் எடுக்க நேரிட்டுள்ளது. 173 இளம் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 8 முதல் 14 வயதிற்குட்பட்ட 11 சிறு பிள்ளைகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.





.jpg)







