களுத்துறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை (03) நடைபெற்ற சட்டம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்கான மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்வதன் மூலம் நாட்டின் கவனத்தை வேறு திசைக்கு திருப்பும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
நிலக்கரி கொள்வனவு தொடர்பான மோசடி குறித்து நாம் கேள்வி எழுப்பிய பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தார்கள். கொள்கலன்கள் தொடர்பான விவகாரம் பேசப்பட்டபோதும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தார்கள். டொலர் விவகாரம் தொடர்பாகவும் மக்கள் கேள்வி எழுப்பியபோது மற்றுமொருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு ராஜபக்ஷவை கைது செய்து நாட்டில் புதியதொரு பேசுபொருளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கான முயற்சி இடம்பெறுகின்றது.
நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. அவருக்கு எதிரான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எமக்கு பல கேள்விகள் உள்ளன. ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தும்போது, அந்தக் குற்றச்சாட்டுடன் நேரடியாக தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ரக்பி போட்டி தொடர்பான விவகாரத்தில் போட்டி நடைபெற்றதா, அதனை ஏற்பாடு செய்தவர்கள் யார், அதற்காக பணம் வழங்கப்பட்டதா, பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பவற்றை முதலில் விசாரிக்க வேண்டும். அதன்பின்னரே தனிநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதன் மூலம் எமது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திவிட முடியாது. அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
சட்டம் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாகச் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக மாத்திரம் சட்டம் பயன்படுத்தப்பட்டு, அரசாங்கத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அங்கு நீதியை எதிர்பார்க்க முடியாது.
அரசாங்கத்தின் ஊழல்களை மறைப்பதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜபக்ஷக்களை கைது செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த நாட்டில் சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாகச் செயற்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.









.jpg)


.jpg)
