டித்வா சூறாவளி பாதிப்பால் நிறுத்தப்பட்ட கொழும்பு - பேராதனை மற்றும் கம்பளை ரயில் சேவை இன்றுடன் மீண்டும் இயக்கம்!


10 மாதங்களுக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை மீண்டும் ரயில்களை இயக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அத்திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

டித்வா சூறாவளிக்குப் பிறகு மலையக மார்க்கத்தில் இவ்வாறு ரயில் சேவைகள் இடம்பெறுவது சுமார் 10 மாதங்களுக்குப் பிறகாகும் என அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்தார்.