இலங்கையில் இன்னுமொரு பதக்க எதிர்பார்ப்பான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டி இன்று (01) நடைபெறவுள்ளது.
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டுக்கு அடுத்து அதிகபட்சமாக 24 வீர, வீராங்கனைகள் தடகளத்தில் பங்கேற்றபோதும் ஆடவருக்காக ஈட்டி எறிதலில் தரங்க தவிர்த்து ஒருவராலும் பதக்கம் வெல்ல முடியாமல் போனது.
கடைசியாக நேற்று முன்தினம் (29) இலங்கை அணி பங்கேற்ற பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனைகள் 7 ஆவது இடத்தையே பிடித்தனர். நதீஷா ராமநாயக்க உட்பட இலங்கை அணி போட்டித் தூரத்தை 3:34.90 நிமிடங்களில் நிறைவு செய்யும்போது, இந்திய வீராங்கனைகள் 3:29.69 நிமிடங்களில் போட்டியை முடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.
இதில் காலிங்க குமாரகே உட்பட இலங்கை ஆடவர் 400 மீற்றர் அஞ்சலோட்ட அணி தகுதிச் சுற்றிலேயே விதி மீறல் காரணமாக தகுதி இழப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய தூர ஓட்ட வீரர் காலிங்க குமாரகேவும் இம்முறை போட்டியில் சோபிக்கப்பவில்லை. அவரது பதக்க எதிர்பார்ப்பான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு குமாரகே தகுதி பெற்றபோதும் அந்த இறுதிப் போட்டியில் கடைசி இடமான எட்டாவது இடத்தையே பிடித்தார். அதேபோன்று அவர் பங்கேற்ற 400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி ஆரம்ப சுற்றுடன் தகுதி இழந்தது. முன்னதாக பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்பச் சுற்றில் பங்கேற்ற தக்ஷிமா கொடிதுவக்கு போட்டித் தூரத்தை 2:08.06 நிமிடங்களில் நிறைவு செய்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததோடு ஆண்களுக்காக 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ஹர்ஷ திசாநாயக்கவும் ஆரம்ப சுற்றுடன் வெளியேறினார். இலங்கையின் மற்றொரு பதக்க எதிர்பார்ப்பான பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தில்ஹானி லேகம்கே 59.27 மீற்றர்கள் தூரம் எறிந்து 5 ஆவது இடத்தையே பிடித்தார். பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற மதுஷானி ஹேரத் அந்தப் போட்டிகளில் முறையே 12 மற்றும் 8 ஆவது இடங்களையே பிடித்தார்.
கடைசியாக 2023 இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தடகள வீர, வீராங்கனைகள் ஒரு தங்கம் மற்றும் இரு வெண்கலப் பதப்பங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்று ஆண்களுக்கான 60 கிலோகிராம் ஆரம்ப சுற்று ஜூடோ போட்டியில் இலங்கையின் விமுக்தி பிரியங்கர பங்கேற்றார். கிரிகிஸ்தானின் டுகோல் கனட்பெக்கை எதிர்கொண்ட அவர் தோல்வியை சந்தித்து வெளியேறினார். அதேபோன்று 66 கிலோகிராம் எடைப்பிரிவில் 16 பேர் சுற்றில் பங்கேற்ற தஹம் விபுலவீர கசகஸ்தான் வீரர் குஸ்மான் கைரிகிஸ்பெயேவிடம் தோல்வியை சந்தித்தார்.
மற்றொரு பதக்க வாய்ப்பு
இந்நிலையில் இலங்கையின் மற்றொரு பதக்க எதிர்பார்ப்பாக உள்ள ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் சஹன் ஆரச்சிகே தலைமையிலான இலங்கை அணி இன்று இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
நிஷின், கொரகி மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டினால் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை வெல்வது உறுதியாகும் என்பதோடு தோல்வி அடைந்தாலும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெறவுள்ளது.
எனினும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஷரேயஸ் ஐயர் தலைமையிலான இந்தியாவின் வலுவான டி20 அணி ஒன்று களமிறங்கி இருப்பது இலங்கைக்கு சவாலாக உள்ளது. ஆனால் ஆசிய போட்டிக்கு முன்னர் ஜப்பான் அணியை எதிர்கொண்ட இந்தியா பெரும் தடுமாற்றத்திற்குப் பின்னரே அந்தப் போட்டியில் வெற்றியீட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் பெய்து வரும் மழை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இடையூறாக இருந்த வருவதோடு அது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காலிறுதி போட்டிகள் அனைத்துமே ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டு ஐ.சி.சி. டி20 தரவரிசை அடிப்படையிலேயே அரையிறுதிக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றைய தினத்திலும் மழை இடையூறு செய்தால் ஐ.சி.சி. தரவரிசையில் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை ஏற்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த போட்டியில் தங்கம் வென்றபோதும் கடைசியாக சீனாவில் நடந்த போட்டியில் காலிறுதியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது.
கிரிக்கெட் போட்டியின் மற்ற அரையிறுதியில் இன்றைய தினத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இதுவரை ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் 24 ஆவது இடத்தில் உள்ளது. சீனா எட்ட முடியாத இடைவெளியுடன் 143 தங்கம் உட்பட 255 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
போட்டியை நடத்தும் ஜப்பான் 45 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 183 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்திலும் தென் கொரியா 24 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

.jpg)