வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை (1) மாலை குறித்த இளைஞர் மைதானத்தில் நின்றநிலையில் மழை பெய்துள்ளது. இதனையடுத்து அவர் ஒரு மரத்தின் கீழ் சென்று நின்றுள்ளார். இதன்போது அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வவுனியா செக்கடிப்பிலவு பகுதியை சேர்ந்த 20 வயதான ஜோசப் அன்ரணி என்ற இளைஞரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பொழிந்திருந்தது.





.jpg)







