சந்தேகத்திற்கிடமான மேற்படி கொள்கலனைச் சோதனையிட்டபோது, அதில் 15 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான இரும்புகள் உள்ளமை கண்டறியப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்கலனில்,சந்தேகம் கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிடுவதற்காக அதனை தடுத்துவைத்திருந்தனர். பொலிஸாரும் இதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்பிரகாரம் பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ், நேற்று கொழும்பு இங்குருகடே சந்திக்கு அருகிலுள்ள துறைமுக நுழைவுப் பாதையை அண்மித்த பகுதியில் வைத்து, இந்த கொள்கலன் சோதனையிடப்பட்டது.
கொள்கலன் மற்றும் அதிலிருந்த இரும்புத் தொகை தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை சுங்கத்துறையும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





.jpg)







