களுத்துறை மாவட்டத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற சட்டம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்கான மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை தொடர்பில் பேசாமல் இந்த நாட்டின் சட்டம் மற்றும் நீதி குறித்து நாம் பேச முடியாது. இது 13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம். அந்தச் சம்பவத்துடன் இருவர் தொடர்புபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்தார். அவரை அழைத்து வந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பெட்டகத்தில் குறிப்பிட்டளவு பணம் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார். அந்தக் கூற்றின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க முடியாத வகையில் அவரை சிறையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு எங்கே நீதி இருக்கிறது? இந்த நாட்டில் எங்கே நியாயமான நிலைமை இருக்கிறது? நாமல் ராஜபக்ஷ குற்றமற்றவர் என்று நான் கூறவில்லை. அவருக்காக சட்டத்துக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பை நாம் கோரவில்லை. ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுக்கு ஒரு முறையான நடைமுறை உள்ளது.
விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணையில் ஆதாரங்கள் கிடைத்தால் குற்றவாளிக்கு தண்டனை வழங்க முடியும்.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னவென்று வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? இல்லை. ஆனால் அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுதான் நாம் கூறும் அநீதி. இதுதான் நாம் கூறும் அநியாயம்.
இன்று நாமல் ராஜபக்ஷவுக்கு செய்யப்படும் அநீதி நாளை எமது பிக்குகளுக்கு செய்யப்படாது என்பதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? நாளை உங்கள் இளம் பிள்ளைக்கு இதே அநீதி இழைக்கப்படாது என்பதுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதுதான் இந்த சமூகத்தின் முன்னுள்ள பிரச்சினை.
நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அது பொதுஜன பெரமுனவுக்காகவோ, நாமல் ராஜபக்ஷவிற்காகவோ மாத்திரம் அல்ல. இந்த நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பதுக்காகவும், சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதுக்காகவும் அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இன்று நாமல் ராஜபக்ஷவுக்கு வைக்கப்பட்ட கை நாளை உங்கள் மகனுக்கும் வைக்கப்படாது என்பதுக்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.









.jpg)


.jpg)
