
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த நிலையில், தினியாவல பகுதியில் வைத்து நேற்றிரவு அளுத்கம குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.
அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டுப் பயணத்தடையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர், நேற்று சனிக்கிழமை (03) தினியாவ பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நேற்றிரவே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் இன்றையதினம் உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.








.jpg)


.jpg)
