
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் டொக்டர் என்.சீ.டீ.ஆரியரத்ன தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை என்பது அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை என்பதுடன் உள்நாட்டில் காணப்பட்ட யுத்த காலத்தில் இராணுவத்தினருக்கு சிகிச்சை வழங்குவதற்காக வேண்டி முக்கிய இடமாக காணப்பட்ட ஒரு வைத்தியசாலை தான் அநுராதபுரம் வைத்தியசாலையென்பது.
பொதுமக்களுக்கு மேலும் சிறந்த சுகாதார சேவையினை வழங்குவதற்காக வேண்டி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் அது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுவருகின்றது.
3545 மில்லியன் ரூபா செலவில் எட்டு மாடிகளை கொண்ட இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக வேண்டி அண்மையில் ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் 18 மாதங்களில் புதிய கட்டிடம் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியுடன் இப்பாரிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.








.jpg)


.jpg)
