சட்டவிரோத சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது




பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டவல பகுதியில் வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த 2,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பேருவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டயகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.