நாட்டின் இருவேறு பகுதிகளில் வீதி விபத்துகள் – இருவர் உயிரிழப்பு



நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மித்தேனிய - பனாமுர வீதியின் முல்அடியாவல சந்தைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய திசையை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார்.

இதேவேளை, மதவாச்சி - மன்னார் வீதியின் கல்லாறு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் திசையை நோக்கிப் பயணித்த பஸ் வண்டியொன்று, மற்றொரு பஸ் வந்தியை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் தீவிர காயமடைந்த சைக்கிள் செலுத்துனர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சின்னத்தம்பனை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.

விபத்தின் பின்னர் பஸ் வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபரை கைது செய்வதற்காகச் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.