விலங்குகளை வேட்டையாட வைத்த துப்பாக்கி வெடித்து விபரீதம்: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் மரணம்!



நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தப்போவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (01) வேட்டைத்துப்பாக்கி ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்த நபர் ஒருவர் நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவராவார்.

உயிரிழந்த நபரினால் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட வேட்டைத்துப்பாக்கி வெடித்ததிலேயே இம்மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.