
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகம மற்றும் மோலகந்த ஆகிய பகுதிகளில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்தப்படும் 3,600 லீற்றர் கோடா (20 பீப்பாய்கள் ) கைப்பற்றப்பட்டதுடன் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (01) கிடைத்தத் தகவலின் பேரில் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 57 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)







