நுவரெலியாவில் இந்திய உதவி தூதரகத்தின் மக்கள் சந்திப்பு – OCI, வீசா விண்ணப்பங்களும் ஏற்பு



கண்டி இந்திய உதவி தூதரகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய மண்டபத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கண்டி உதவி தூதரகத்தின் எல்லைக்குட்பட்ட மத்திய மாகாணத்தின் நுவரெலியா,கண்டி, மாத்தளை மாவட்டங்கள், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய பிரஜைகள், இந்திய வம்சாவளி மக்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

OCI அட்டை பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் கொண்ட அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் முறையாக நிரப்பப்பட்ட வீசா விண்ணப்பங்களும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.