ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு - செலவுத் திட்டம்


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (12) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 


நிதி ஒதுக்கீடுகள்

- 2027ஆம் ஆண்டுக்கான மொத்த அரச செலவீனம்: ரூ. 4,99,277.03 கோடி.

- 2026ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம்: ரூ. 4,43,435.65 கோடி.

- இந்த முறை முதன்முறையாக மீண்டெழும் செலவுகளுக்காக 2000 பில்லின் ரூபா ஒதுக்கீடு.

- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செலவீனம் ரூ. 55,841.38 கோடியால் அதிகரிப்பு.

- பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு மொத்தமாக ரூ. 68,850 கோடி ஒதுக்கீடு.

- 2026ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 4,050 கோடியால் அதிகரிப்பு.

- ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகள் மற்றும் ஜனாதிபதி செயலகச் செலவுகளுக்கு மொத்தமாக ரூ. 1,35,205.68 கோடி ஒதுக்கீடு.


- ஜனாதிபதிக்கான செலவீனம் ரூ. 1,120.38 கோடி.

- பிரதமருக்கான செலவீனம் ரூ. 102.21 கோடி.


வரவு - செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு

- இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் – 7 நாட்கள்.

- நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்.

- நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு.

- குழுநிலை விவாதம் – 19 நாட்கள்.

- நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை குழுநிலை விவாதம்.

- டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாம் மதிப்பீடு மீதான இறுதி வாக்கெடுப்பு.



நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சபையில் முன்வைத்து உரையை ஆரம்பித்தார்.

- நாட்டின் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக பாதுகாத்துள்ளோம்.

- பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளெழும் திட்டங்களுடன் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.சிறந்த சமூகத்தை உருவாக்குவது வரவு - செலவுத் திட்டத்தின் பிரதான இலட்சியமாகும்.

- அரச நிதியை சேகரிப்பது மாத்திரம் எமது பொறுப்பல்ல ஒவ்வொரு ரூபாவுக்கும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.அதுவே எமது இலக்கு.

- நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, இலக்கு, பூகோள தாக்கம் மற்றும் சாதக,பாதக காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

- எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் முன்மொழிவுகள் பல்வேறு தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

- பொருளாதார பரிமாற்றம் - நிலையான அபிவிருத்தி 2027 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்தின் பிரதான இலக்காகும்.

- 07 பிரதான மூலோபாய திட்டங்களை உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

- பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் தியாகத்துக்கு சலுகை பெற்றுக் கொடுப்பேன்.

- பேரண்டப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாணயக் கொள்கை வலுவானதாகவே பேணப்படும்.

- வெளிநாட்டு கையிருப்பில் முன்னேற்றகரமான தன்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

- 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மீண்டெழும் செலவுகளுக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்ததுடன் நிறைவடையும்.

- செயல்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நிதி பிரதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

- பழைய சட்டங்களை வைத்துக் கொண்டு புதிய பொருளாதார பரிமாற்றத்தை அடைய முடியாது.

- பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்புடன் தொடர்புடைய சகல சட்டங்களும் திருத்தப்படும்,புதிய சட்டங்கள் இயற்றப்படும்.அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

- நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் கடன் திட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் எதிர்வரும் ஆண்டின் முதல் காலப்பகுதியில் நுண்கடன் கண்காணிப்பு நிறுவனம் ஸ்தாபிக்கப்படும்.

- சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

- அரச முதலீட்டை மொத்த தேசிய உற்பத்தியில் 14 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானம்.

- அரச சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க " கெளடெக் " (govtech) நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். இதற்கான சுற்றறிக்கை வெகுவிரைவில் வெளியிடப்படும்.

- கூரை சூரிய மின்சக்தி பயனாளர்களுக்கு மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ 3.5 பில்லியன் ரூபா நிவாரணம். ஒரு கிலோ வோட்டுக்கு 25000 ரூபாய் வழங்கப்படும். 10 கிலோ வோட் வரை அதிகரிக்க 250000 ரூபாய் மானியம்.

- டிஜிட்டல் துறை அபிவிருத்திக்காக 28,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை சட்டமூலம் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதமளவில் முன்வைக்கப்படும்.

- ஆசிரிய பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 10,500 ரூபா கொடுப்பனவு 20, 000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

- பாடசாலை கல்வி கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 35 ,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

- வவுனியா பல்கலைக்கழக தங்குமிட விடுதி வசதிக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- இலங்கை - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளுக்காக 3430 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

- வீதிகள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரத பாதை அபிவிருத்திக்காக 251 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

- கிராமிய பாலம் அபிவிருத்திக்காக 10,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க 54,134 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- பாராளுமன்றத்துக்கு மேலான வான்பரப்பில் விமானம், ஹெலிக்கொப்டர் செல்வதற்கு தற்போது அமுலில் உள்ள தடை விரைவாக நீக்கப்படும்.

- கடற்றொழில் துறை அபிவிருத்திக்காக 6200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- பேசாலை மீன்பிடி துறைமுக அபிவிருத்திக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- நீரழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாகவும், விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாகவும் அதிகரிப்பு.

- வடக்கு - கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 6000 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- பெருந்தோட்ட பகுதியில் இந்திய அரசின் ஒத்துழைப்புடனான 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை.

- பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 200 ரூபா ஊக்குவிப்பு தொகை அடுத்தாண்டும் வழங்கப்படும்.

- பெருந்தோட்ட கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை மீள்பரீசிலனை செய்ய விசேட குழு நியமனம்.

- அரச சேவையாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- அப்பியாசப் புத்தகம் மற்றும் அச்சிடப்பட்ட புத்தகம் மீதான வற் வரி நீக்கம்.


- வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரை இலங்கையுடன் இணைக்கும் வகையில், “உலகளாவிய இலங்கை மரபுரிமைக் குடிமகன்” திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

- அதற்கமைய இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும், மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.

- யானைத் தாக்குதலால் இடம்பெறும் உயிரிழப்புக்கு தற்போது வழங்கப்படும் ஒரு மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகை 2 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.

- புகையிரத சேவையை இலத்திரனியல் மயப்படுத்த 80 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- புகையிர நிலையங்களை புனரமைப்பதற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அதேபோல் புதிதாக 5 புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு.

- 2027 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கொழும்பு - பதுளை புகையிரத சேவையை முழுமையாக ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுக்காண முதற்கட்டமாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தில் அதிகரிப்பும் தொடர் வரி வரம்புகளில் திருத்தமும்

- 800 இறக்குமதி HS குறியீடுகளுக்கான செஸ் வரி 25% குறைப்பு: 2027 ஜனவரி முதல் செய்தித்தாள் அச்சிடும் கடதாசிக்கான PAL வரி நீக்கம் -

- திரையரங்கு நுழைவுச்சீட்டு மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியைக் கணிப்பதற்கான அடிப்படையினை திருத்துதல் -

- மின்சார பஸ்களை அறிமுகப்படுத்தத் திட்டம்; சீனா இலவசமாக வழங்கும் 100 மின்சார பஸ்களுக்கான டிப்போக்கள் மற்றும் மின்னேற்றும் நிலையங்களை அமைக்க 4,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிப்பு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, புதிய அம்பியூலன்ஸ் கட்டமைப்பிற்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- சுற்றுலா அபிவிருத்தி அறவீட்டினை நீக்குதல்

- பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்காக 82 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

- குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) 15 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம்.

- மலையகத்தில் ஒடுக்கமான வீதிகளில் பயணிக்க 22 ஆசனங்களைக் கொண்ட 50 சிறிய பஸ்கள்.

- தொலைதூரப் போக்குவரத்துச் சேவைகளுக்காக குளிரூட்டல் வசதி (AC) கொண்ட 600 பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை.

- விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிப்பு.

- நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 77,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- தற்போதுள்ள கைத்தொழில் வலயங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 4,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களை புனரமைக்க 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- நெற்செய்கைக்கான உர மானியம் ஒரு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாவாக வழங்கப்படுவதுடன் 2026/2027 பெரும்போகத்திலிருந்து வயல் நிலங்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படும்.

- டித்வா அழிவு புனருத்தாபனத்திற்கான குறைநிரப்பு மதிப்பீடு -

- அனுராதபுரத்தில் கால்நடை வைத்தியசாலையை அமைக்க 3 ஏக்கர் காணி.

- மீனவர் திடீர் மரண இழப்பீடு 2 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.

- அஸ்வெசும உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவுகளுக்காக 230 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 3 வீத குறைந்தபட்ச வட்டி வீதத்தின் கீழ் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ஒரு மில்லியன் ரூபா வரையிலான குழு கடன்கள்.

- பெருந்தோட்டத்துறையின் அபிவிருத்திக்காக 13,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

- தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை சட்டம் திருத்தப்படும்.

- சிகிரியா உள்ளூர் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

2027 ஆம் நிதி ஆண்டுகாகன வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து சுமார் 5 மணிநேரம் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து உரையை நிறைவு செய்தார்.