கடலில் நீராடிய 43 வயது இந்தியப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு!



கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடனே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டு, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்கிஸ்ஸ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.