
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட சேதவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பீடி இலைகளுடன் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் 10 ஆம் திகதி மாலை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 56 இலட்சத்து 65 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 5,482 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜா-எல மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 68 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மேற்கு மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.








.jpg)



