குறித்த இனிப்புகளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அனுமதிக்கப்பட்ட நுண்ணுயிர் அளவை மீறியதாகக் கண்டறியப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்கிரீம், பால் தேநீர் மற்றும் சிரப் வகைகளின் 21 மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வகையான பொருட்களுக்குக் கட்டாய தரச் சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆராய்ந்து வருகிறது.













