
இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விபரங்களை எதிர்வரும் காலங்களில் வெளியிட இலங்கை கடற்படை எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை, தென் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது , 132 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் (Ice) மற்றும் 57 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கடந்த வியாழக்கிழமை (05) உள்நாட்டு மீன்பிடிப் படகொன்றும் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியத் திட்டத்தின் கீழ், இதுவரை 2,773 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் 2,130 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த வீதிப் பெறுமதி 114 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
இதுவரையான காலப்பகுதியில் 2026ஆம் ஆண்டில் மாத்திரம், கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஊடாக 73 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








.jpg)



