நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம் – ஒருவர் மீட்பு!



அம்பாறை - நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதுடன், மற்றைய இளைஞர் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 16 மற்றும் 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்ட இளைஞர் நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, காணாமல் போயுள்ள இரு இளைஞர்களையும் தேடும் பணியில் கடற்படையினர், நிந்தவூர் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.