பல போராட்டங்களை எதிர்க்கொண்டால் மாத்திரமே சஜித் வேட்பாளராக முடியும்



ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவதற்கு கட்டாயமாக பலவித போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். 

ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பதவியேற்ப்பு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் கட்சியில் உள்ள மற்றுமொருவருக்கு வேட்பாளர் தகுதியை விட்டுக்கொடுக்காது எனவும் கூறினார். 

ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் ஒன்று அண்மிக்கும் நேரத்தில் வேட்பாளர் தெரிவில் பலவித முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதாகவும் இதனை தற்போதும் கண்டுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். 

அதற்கமைய சஜித் பிரேமதாசவும் பல போராட்டங்களை எதிர்க்கொண்டால் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளரவதற்கான தகுதி கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.