பாலியல் வன்புணர்வு; இருவருக்கு கடூழியச் சிறை



பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக இருவருக்கு, தலா 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் தலா 05 இலட்சம் ரூபாய் நட்டஈடும் வழங்கி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று  (17) உத்தரவிட்டார்.

இருவேறு வழக்குகளாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த வழங்கின் தீர்ப்பில், குற்றவாளிகளின் வயதைக் கருத்தில்கொண்டே, 10 வருடங்கள் கடூழியச் சிறை வழங்கப்பட்டதாகவும் இல்லையொனின் 20 வருடங்களாக அதிகரிக்கப்பட்டிருக்குமென, நீதிபதி குறிப்பிட்டார்.

2010ஆம் ஆண்டு ஜீலை மாதம் 1ஆம் திகதிக்கும் 2011ஆம் ஆண்டு ஜீன் மாதம் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், திருகோணமலை - நிலாவெளி பகுதியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 67 வயதுடைய நபரொருவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குற்றஞ்சாட்டபட்டவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் தண்டப்பணமும் அதைச் செலுத்தத் தவறினால் 1 மாத கால கடுழியச் சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 இலட்சம் ரூபாய் நட்டஈடும் வழங்க வேண்டுமெனவும் அதை வழங்கத் தவறினால் மேலும் 02 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்சொழியனால், நேற்றையதினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, அதே பெண்ணை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 70 வயதுடைய நபரொருவருக்கும் மேற்படி தண்டனை வழங்கப்பட்டது.