வின்சென்ட் உயர்தர பெண்கள் வருடாந்த பரிசளிப்பு விழா


(LEON)
மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி .ஹரனியா சுபாகரன் தலைமையில் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வில் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலாசார நடன நிகழ்வுகளும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன

இதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர ,சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு , தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நாடத்தப்பட்ட நாடக போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தினை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, சிறந்த புள்ளிகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் பரிசில்களும் ,சான்றிதழ்களும் , வெற்றிக்கின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரின் இரண்டாவது செயலாளர் கலாநிதி திருமதி எஸ் . அதிரா , மூன்றாவது செயலாளர் திருமதி . சஞ்சனா மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , வலயக் கல்விப்பணிப்பாளர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.