ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் முன்னெடுத்த தாய்மாருக்கான பால்மா பைக்கற்றுகள் வழங்கும் நிகழ்வு!

(வி.சுகிர்தகுமார்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கான பால்மா பைக்கற்றுகளை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற கட்டடத்தில் நேற்று முன் தினம் (12) நடைபெற்றது.

அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் முன்னெடுத்த இவ் வேலைத்திட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில்-01, கோளாவில்-02, கோளாவில்-03, நாவற்காடு, அக்கரைப்பற்று7ஃ4, வச்சிக்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட தாய்மார் பால்மா பைக்கற்றுக்களை பெற்றுக்கொண்டனர்.

இந்துமாமன்ற தலைவர் எஸ்.கனகரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பால்மா பைக்கற்றுகளை வழங்கி வைத்தார்.
நிகழ்வுகளில் இந்துமாமன்றத்தின் முன்னாள் தலைவர் வே.சந்திரசேகரம் செயலாளர் ந.சுதாகரன் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்கள் தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு தாய்க்கு இரு பால்மா பைக்கற்றுக்கள் வீதம் இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.