ரஷ்யாவில் 6.9 ரிச்டர் அளவு கோலில் பாரிய நிலநடுக்கம் !


ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுமார் 6.9 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம் பதிவாகிள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குரில் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 99 கிலோ மீற்றர் தொலைவில் 62 மைல் தூரத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அத்தோடு குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென தெரிவித்த அமெரிக்க ஆய்வு மையம் உயிரிழப்புகள் மற்றும் சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரையில் செய்திகள் வெளிவரவில்லை. அத்தோடு குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.