ஆலையடிவேம்பில் கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுப்பு !

(வி.சுகிர்தகுமார்)
நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலைமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியஉணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் சில இடங்களில்அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிலையினையும் காணமுடிகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டம்அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சந்தை பிரதேசங்களில் மக்கள் வெள்ளம் இன்று காலை முதல் அலை மோதியதையும் அவதானிக்க முடிந்தது.


பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்போடு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஆலோசனை வழங்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதையும் காண முடிந்தது. அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் இராணுவத்தினர் களத்தில்நின்று மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதையும் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களைஅறிவுறுத்தல் வழங்குவதையும் சதோச மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையில் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள மக்கள் வெள்ளம் காத்திருந்ததையும் அங்கு கண்டுகொள்ளமுடிந்தது.

இதேநேரம் காரைதீவு இளைஞர்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் மூலம் அன்புக்கரங்கள் அமைப்பின் உதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனாவிழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும்; வழங்கியதுடன் முகக்கவசங்கள் இல்லாது சென்ற மக்களுக்குமுககவசங்களை அணிவிக்கும் பணியிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

இது இவ்வாறிருக்க மக்களின் நலன் கருதிஅம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின்உத்தரவிற்கமைய மக்களுக்கு இலகுவான முறையில் பொருட்களை நிர்ணய விலையில் பெற்றுக்கொடுக்கும்பணி சமுர்த்தி வங்கிகளினூடாக நாளை முதல் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சத்தோச நிலையங்களில் இருந்து சமுர்த்திவங்கிகளினூடாக மொத்தமாக பெறப்படும் உலர் உணவு பொதிகள் குறித்த பிரதேசத்தின் கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின்கண்காணிப்பில் சமுர்த்தி அடிப்படை அமைப்பின் உதவியோடு பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.