இத்தாலியுடன் ஒப்பிடும் போது இலங்கை மோசமான நிலைக்குள்ளாகும் -அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இத்தாலியுடன் ஒப்பிடும் போது இலங்கை மோசமான நிலைக்குள்ளாகும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள வீகிதத்துடன் ஒப்பிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை முதல் 7 நாட்களின் முடிவில் (முதலாவது உள்நாட்டு கொரோனா நோயாளி முதல்) இத்தாலியுடன் ஒப்பிடும்போது நாங்கள் மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம் என சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்ததற்கமைய இது தொடர்பில் தீவிர முடிகளை எடுக்கவில்லை என்றால் பாரிய நிலைமை ஒன்று இலங்கையில் ஏற்படும் என கூறியுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இந்த நிலைமை உச்சத்தை எட்டும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.