ஊடகவியலாளருக்கு இடையூறு: ஐவருக்கு விளக்கமறியல்!


(ஜே.எப்.காமிலா பேகம்)
கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிய பாணந்துரை – அட்டுளுகம பிரதேசத்தில் செய்தி சேகரிப்பிற்குச் சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவித்த ஐவருக்கும் நாளை வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரும் இன்று திங்கட்கிழமை பகல் பாணந்துரை நீதிமன்ற மேலதிக நீதவான் ரஞ்ஜித் ரொட்றிகோ முன்பாக ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை இவர்கள் ஆஜர்படுத்தப்படும்போது அடையாள அணிவகுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்த சந்தேக நபர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவிய அட்டுளுகம – கொட்டவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.