அமெரிக்க தூதரகம் முன் பதற்றம்; 10 பேர் கைது!

(காமிலா பேகம்)
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆர்ப்பாட்டம் செய்த 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்கள் இன்று நண்பகல் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமெரிக்காவில் கறுப்பின நபர் கொலையை கண்டித்து இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிமன்றம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நேற்று தடை உத்தரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.