கல்முனை துளிர் கழகத்தினால் நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!

Covid-19 காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட அன்றாட கூலி வருமானம் பெறும் மிகவும் பின் தங்கிய மக்களுக்கான கல்முனை துளிர் கழகத்தின் 14ம் கட்ட நிவாரணம் நேற்றைய தினம்(07-06-2020) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முறுத்தானை, அக்கிறானை, கல்லடிவட்டை, கானந்தனை ஆகிய பிரதேசத்தினை சேர்ந்த 200 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் சமூக சேவை கொடையில் நிதி உதவி ஆற்றிய கனடாவினை சேர்ந்த திருமதி சக்கிரா எரிக் மற்றும் அமெரிக்காவினை சேர்ந்த திருமதி லலினா எட்வார்ட்ஸ் ஆகியோர் அனுசரனை வழங்கியிருந்தனர், மேலும் இவ் நிவாரண பொதிகள் அவர்கள் சார்பில் வழங்கப்படும் இரண்டாவது கட்டமாகும். இதுவரை 1777 உலர் உணவுப் பொதிகளை நிவாரணமாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பொது மக்களுக்கு துளிர் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கக்கது.