இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் சகல தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் ஜூலை மாதம் 6ம் திகதி மாணவர்களுக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் அகில தனுஸ்க நாகவத்த விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 011 72 70 270 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.