த.தே கூட்டமைப்பின் திகாமடுல்ல வேட்பாளர் இரா.சயனொளிபவன் மீது கருணா கும்பல் தாக்குதல்!


த.தே கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட இரண்டாம் இலக்க வேட்பாளர் இரா.சயனொளிபவன், அவரது சகோதரர், மற்றும் அவரது உறவினர்கள் கருணா குழுவினரால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.


இரா.சயனொளிபவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பும் தருணத்தில் கருணா குழுவினரால் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

இவரது சகோதரர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், தாக்கிய  கருணா குழுவினர் சிலர் மது போதையில் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பலர் தப்பியோடியுள்ளனர்.