கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்

(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப்பெற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை குறித்த வசதியில்லாத பாடசாலைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கான இலவச நீர்வினியோகம் வழங்கும் விஷேட செயல்திட்டம் பாம் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே தங்கள் பாடசாலைக்கும் தூய குடி நீரின் தேவை காணப்படின் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இம்மாதம் 30ம் திகதிக்கு முன் பதிவு செய்துகொள்ளுங்கள் என நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அழைக்க வேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் - 065 20 590 66 அல்லது 075 381 66 35.