முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்தின் அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் 'ரஹ்மதுல் ஆலமீன்' என்ற கருப்பொருளில் தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வின் செயற்திட்டங்களில் ஒன்றான மரநடுகை நிகழ்வு முஅல்லா மஹல்லா பள்ளிவாசலில் வெள்ளியன்று(30) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபா கலந்துகொண்டு மரம்நடும் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
மேலும் மாவட்ட முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.சுபைதீன் மௌலவி மற்றும் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் யு.எல்.மஹ்றூப் உபதலைவர் எஸ்.மஹ்றுப்ஆதம் மஸ்ஜிதுல் முஅல்லா தலைவர் பி.ரி.எம்.இஸ்மாயில் கலாசார உத்தியோகத்தர் எ.பஸ்மியா மற்றும் உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிருவாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4