முதலில் கொரோனா தடுப்பூசி சுவசெரிய அம்பியூலன்ஸ் அலுவலக அதிகாரிகளுக்கே!நாட்டில் கொரோனா தடுப்பூசியை ஏற்றும் முதலாவது தரப்பினராக சுவசெரிய அம்பியூலன்ஸ் அலுவலக உத்தியோத்தர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றை ஒழிக்கும் செயற்பாட்டில் சுவசெரிய அம்பியூலன்ஸ் அலுவலக உத்தியோத்தர்கள் முன்னின்று செயற்படுவதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் COVID – 19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள சுவசெரிய நிறுவனத்திற்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

297 அம்பியூலன்ஸ் வண்டிகளை கொண்ட சுவசெரிய சேவையில் 1,399 ஊழியர்கள் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.